Close

Election Polling Officers Training Collector Inspection

Publish Date : 24/03/2019
cie

செ.வெ.எண்:-31/2019 நாள்:-24.03.2019

cie1cie2

திண்டுக்கல் மாவட்டம் வாக்குமையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள விக்டரி மேல்நிலைப்பள்ளி மற்றும் நிலக்கோட்டையில் உள்ள கே.சி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்கு மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது.

நடைபெற உள்ள நாடளுமன்ற தொகுதி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு மையத்தில் ஒரு வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குசாவடி அலுவலர் பணியில் ஈடுபட உள்ளனர். நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் உள்ள வாக்கு மையத்தில் மட்டும் கூடுதலாக ஒரு வாக்குசாவடி அலுவலர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.முதற்கட்டமாக வாக்கு சாவடி மையத்தில் வாக்கு சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தெளிவாக திரையிட்டு மண்டல அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்ட்டுள்ளது. மேலும் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பயிற்சி அளிக்கும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் (வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட) 10708 நபர்கள் வாக்கு மையத்தில் பணிபுரிய உள்ளனர். அனைத்து அலுவலர்களுக்கும் இன்று முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளமல் தவிர்த்தவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய தேர்தல் நடத்தை விதிகள் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி.ஜீனத்பானு மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் நவநீதன் ஆயியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்