Close

Election- Postal Ballot -Received from Adults

Publish Date : 29/03/2021
.

செ.வெ.எண்:- 41/2021

நாள்:-29.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (விருப்பத்தின் அடிப்படையில்) தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலரால் (Returning Officer) தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தபால் ஓட்டுப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு அளிக்க விரும்பும் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அவர்களிடம் தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்களை (விண்ணப்பப் படிவம்-12 D) மேற்படி வாக்காளர்களிடம் வழங்கி, தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர். விண்ணப்பப் படிவத்துடன் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்றாவணங்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களால் சமர்ப்பிக்கப்பட்டன. உரிய காலத்திற்குள் மற்றும் உரிய முறையில் பெறப்பட்ட தபால் ஓட்டிற்கான விண்ணப்பங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் அவ்விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர்கள் தந்த விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பீடு செய்தும், முறையான அலுவலரால் சான்றாவணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தும், அவை சரியாக இருக்குமாயின், அவ்வாக்காளர்களுக்கு தபால் வாக்கு சீட்டு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 781 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 1854 நபர்கள் என மொத்தம் 2635 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக மொத்தம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. ஒரு குழுவில் 2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்(Presiding Officers), ஒரு நுண் பார்வையாளரும் (Micro Observer), ஒரு வீடியோகிராபர் (Videographer), ஒரு காவலர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவிற்கு தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவினர் வாக்காளரின் வீட்டிற்கு நேரில் சென்று, வாக்குப்பதிவு வழிமுறைகளை விளக்கி கூறியபின்னர், வீட்டிலிருந்தபடியே சம்பந்தப்பட்ட வாக்காளர் ரகசியமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாரிகள் குழு நேரில் சென்று விருப்பத்தை கேட்டறிந்ததில், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 95 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 216 நபர்கள் என மொத்தம் 311 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 15 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர்32 நபர்கள் என மொத்தம் 47 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 96 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 190 நபர்கள் என மொத்தம் 286 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 118 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 361 நபர்கள் என மொத்தம் 479 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 6 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 110 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 214 நபர்கள் என மொத்தம் 324 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 129 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 459 நபர்கள் என மொத்தம் 588 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 218 மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் 382 நபர்கள் என மொத்தம் 600 நபர்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறுவதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த வழிமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.