Election QR Code Quiz – SVEEP

Publish Date : 02/04/2019
1

2 3

செ.வெ.எண்:- 5/2019 நாள்:-02.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் (QR Quiz) ஆன் லைன் வினாடி-வினா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

நடைபெறவுள்ள திண்டுக்கல் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தேர்தல் நாள் அன்று தங்களது பங்களிப்பை உறுதி செய்வதற்காக இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக முதன் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி; மாணவ, மாணவியர்கள் ஜனநாயக கடமையாற்றவும் தேர்தல் குறித்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் குறித்த பல்வேறு விளையாட்டு போட்டிகள், விவாதங்கள், வினாடி-வினா போன்ற நிகழ்வுகள் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற இளம் வாக்காளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை இலக்காக கொண்டு தேர்தல் குறித்த ஆன்லைன் வினாடி-வினா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள செய்யும் வகையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் (QR Code Posters) ஞசு குறியீடுகள் உள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஒட்டப்பட்டுள்ள ஞசு குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் தேர்தல் குறித்த 5 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியான பதில்கள் அளிப்பவர்களுக்கு ரூ.50 பரிசு (BHIM APP) பீம் செயலி வழியாக மின்னனு பரிவர்த்தனை மூலமாக வழங்கப்படும்.

இளம் வாக்களர்கள் மத்தியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் 100 சதவீதம் பங்களிப்பையாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்