Close

Election Sveep Awareness (Street Art)

Publish Date : 25/03/2019
1

2

செ.வெ.எண்:-32/2019 நாள்:-25.03.2019

திண்டுக்கல் மாவட்டம்

மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வை Street Art நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வை Street Art நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக வேண்டும் என்பதை வழியுறுத்தி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஒட்டுவில்லை ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, மாணவ, மாணவியர்களை கொண்டு தேர்தல் குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ளுவசநநவ யுசவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வருகின்ற தேர்தலி;ல் தங்களது வாக்குகளை 100 சதவீதம் அளிக்க வேண்டும் என்பதனை வழியுறுத்தி சுவர்களில் கைரேகை வண்ண அச்சுகள் பதித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, நாளை 26.03.2019 அன்று காந்தி கிராமம் பகுதியிலும் மற்றும் 27.03.2019 அன்று கலிக்கம்பட்டி, அம்பாத்துரை ஆகிய பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சியும் மற்றும் அதனை தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து கிராம, நகர்புற பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

மேலும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், கால்பந்து (29.03.2019 முதல் 30.03.2019 வரை) , கூடைபந்து (30.03.2019 மற்றும் 31.03.2019), 21 வயதிற்குட்பட்;டவர்கள் கலந்து கொள்ளும் தேக்வாண்டோ (28.03.2019), யோகா (30.03.2018), வாலிபால் (06.03.2019 மற்றும் 07.03.2019), கபாடி (31.03.2019), கால்பந்து இறுதி போட்டி (06.04.2019 மற்றும் 07.04.2019), மாராத்தான் (13.04.2019) ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலிகளில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி, இதுபோன்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியம் உணர்ந்து, நாம் அனைவரும் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்;ச்சியில், உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்