Election-SVEEP Contest-2022
செ.வெ.எண்:-36/2021
நாள்:13.12.2021
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25-ஆம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெவுள்ள இந்த விழாவில், அனைத்துப்பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
மேலும், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக “SVEEP Contest-2022” என்ற பெயரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பில் தமிழிலும், “What I want to contribute as a Voter” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் கட்டுரைப்போட்டி நடத்தப்படும். மேலும் ஓவியப்போட்டி, பாட்டு போட்டி, குழு நடன போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஒற்றை வரி ஃமுழக்கம் எழுதுதல் ஆகிய போட்டிகளில், “1.ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 2. 100 சதவிகித வாக்காளர் பதிவு, 3.வாக்காளர் உதவி மைய அலைபேசி செயலி (Voter Helpline Mobile App)இ 4.சுதந்திரமாக வாக்களித்தல், 5.தேர்தலில் பங்கு கொள்வதன் முக்கியத்துவம்” ஆகிய கருப்பொருளின் அடிப்படையில் அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் நடத்தி அவற்றில் சிறந்த படைப்புகளுக்கான பரிசுகள் தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்படும்.
மேலும் பொதுமக்களும், பள்ளி, கல்லூரிகளில் பங்கேற்க இயலாத மாணவ, மாணவியர்களும் ‘ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பில் தமிழிலும், “What I want to contribute as a Voter” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் ஒரு பக்க அளவில் அல்லது 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதி “SVEEP Contest-2022” என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரின் அலுவலக இணைய தளத்தில் 31.12.2021-க்குள் பதிவேற்றம் செய்யலாம். இவற்றில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.