Close

Election – Urban Local Bodies Election Observer Inspection

Publish Date : 08/02/2022
.

.

செ.வெ.எண்:-09/2022

நாள்:05.02.2022

தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாஸரஸ், இ.ஆ.ப., அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாஸரஸ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் பணியினை இன்று(05.02.2022) பார்வையிட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி, நேரடித்தேர்தல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பொது பார்வையளரான அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாஸரஸ், இ.ஆ.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் மற்றும் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளர் அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாஸரஸ், இ.ஆ.ப., அவர்கள் 83003 42972 என்ற செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்கலாம்.

வேட்புமனு பரிசீலனை நடைபெறும் பணிகளை CC TV மூலம் பதிவு செய்யப்பட்டு, கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வேட்புமனு பரிசீலனை பணியினை ஆய்வு செய்யப்பட்டு, வேட்புமனு பரீசீலனை நேர்மையாக நடைபெற சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி ஜெசிந்தா லாஸரஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.