Close

Election – Urban Local body – Electoral Published

Publish Date : 09/12/2021

செ.வெ.எண்:-25/2021

நாள்:09.12.2021

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் – புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்குரிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் இன்று(09.12.2021) சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் – 6,12,880 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள்-2,96,745, பெண் வாக்காளர்கள்- 3,16,060 மற்றும் மூன்றாம் பாலினம்- 75 நபர்கள் உள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த வாக்காளர்கள் -1,81,670 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள்- 88,112, பெண் வாக்காளர்கள்- 93,524 மற்றும் மூன்றாம் பாலினம்-34 நபர்கள் உள்ளனர்.

கொடைக்கானல் நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் – 29,383 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் -14,219, பெண் வாக்காளர்கள் -15,162 மற்றும் மூன்றாம் பாலினம் -2 நபர்கள் உள்ளனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் -28068 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் -13,641, பெண் வாக்காளர்கள் -14,424 மற்றும் மூன்றாம் பாலினம்-3 நபர்கள் உள்ளனர்.

பழனி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் -62,214 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள்- 29,780, பெண் வாக்காளர்கள் -32,420 மற்றும் மூன்றாம் பாலினம் -14 நபர்கள் உள்ளனர்.

23 பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் – 3,11,545 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் – 1,50,993, பெண் வாக்காளர்கள் – 1,60,530 மற்றும் மூன்றாம் பாலினம் – 22 நபர்கள் உள்ளனர்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.