Election(Mid term election) voter list

செ.வெ.எண்:-14/2025
நாள்:-05.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியிடமாக உள்ள 7 இடங்களுக்கும் புகைப்பட வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் அவர்கள் அறிவுரைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், மாநகராட்சி (திண்டுக்கல் மாநகராட்சி-1 இடம) மற்றும் பேரூராட்சிகளில் 6 இடங்கள்(ஸ்ரீராமபுரம்-1, அம்மையநாயக்கனூர்-1, பாலசமுத்திரம்-1, எரியோடு-1, பண்ணைக்காடு-1 மற்றும் சேவுகம்பட்டி-1) உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களில் பல்வேறு காரணங்களால் 31.03.2025 வரை ஏற்பட்டுள்ள 7 காலியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 2025-க்கு இடைக்காலத் தேர்தல்கள் (Mid-term elections) நடத்துவதற்கு ஏதுவாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வாக்காளர் பட்டியல் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(05.05.2025) வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் 16-வது வார்டுக்கான வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று(05.05.2025) வெளியிடப்பட்டார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.