Close

Electoral Roll Final(FINAL VOTER LIST) released

Publish Date : 05/01/2022
.

.

செ.வெ.எண்:-09/2022

நாள்:-05.01.2022

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் வெளியிட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், இன்று(05.01.2022) வெளியிட்டு தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2022-ஐ முன்னிட்டுஇ திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 9,14,328 ஆண் வாக்காளர்கள், 9,63,349 பெண் வாக்காளர்கள் 197 இதரர்கள் என மொத்தம் 18,77,874 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 01.01.2022-ஆம் நாளினைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம்-2022 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 01.11.2021-ஆம் தேதி முதல் 30.11.2021-ஆம் தேதி வரை வரப்பெறற விண்ணப்பங்களில் ஏற்கப்பட்டவைகளில் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று(05.01.2022) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியலில் 18,94,857 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்காளர்கள் விபரம் வருமாறு:

127 பழனி சட்டமன்ற தொகுதியில் 1,36,552 ஆண் வாக்காளர்கள், 1,43,405 பெண் வாக்காளர்கள், 53 இதரர்கள் என மொத்தம் 2,80,010 வாக்காளர்களும், 128 ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1,17,347 ஆண் வாக்காளர்கள், 1,24,980 பெண் வாக்காளர்கள், 9 இதரர்கள் என மொத்தம் 2,42,336 வாக்காளர்களும், 129 ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,41,315 ஆண் வாக்காளர்கள், 1,52,670 பெண் வாக்காளர்கள், 26 இதரர்கள் என மொத்தம் 2,94,011 வாக்காளர்களும், 130 நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,20,887 ஆண் வாக்காளர்கள், 1,25,784 பெண் வாக்காளர்கள், 11 இதரர்கள் என மொத்தம் 2,46,682 வாக்காளர்களும், 131 நத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,39,578 ஆண் வாக்காளர்கள், 1,46,679 பெண் வாக்காளர்கள், 46 இதரர்கள் என மொத்தம் 2,86,303 வாக்காளர்களும், 132 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,36,065 ஆண் வாக்காளர்கள், 1,43,973 பெண் வாக்காளர்கள், 56 இதரர்கள் என மொத்தம் 2,80,094 வாக்காளர்களும், 133 வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,681 ஆண் வாக்காளர்கள், 1,35,737 பெண் வாக்காளர்கள், 3 இதரர்கள் என மொத்தம் 2,65,421 வாக்காளர்களும் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 9,21,425 ஆண் வாக்காளர்கள், 9,73,228 பெண் வாக்காளர்கள் 204 இதரர்கள் என மொத்தம் 18,94,857 வாக்காளர்கள் உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1200 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள்இ மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.