Electronic voting machine
செ.வெ.எண்:-04/2022
நாள்:-03.02.2022
வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 3,000 வாக்குப்பதிவு கருவிகள்(Ballot Unit), 1,500 கட்டுப்பாட்டு கருவிகள்(Control Unit) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்-2022 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி, நேரடித்தேர்தல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 60 மண்டலங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில்(14 மண்டலம்) மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 183 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கொடைக்கானல் நகராட்சியில் (3 மண்டலம்) உள்ள 24 வார்டுகளில் மொத்தம் 38 வாக்குச்சாவடி மையங்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் (3 மண்டலம்) உள்ள 18 வார்டுகளில் மொத்தம் 34 வாக்குச்சாவடி மையங்கள், பழனி நகராட்சியில் (6 மண்டலம்) உள்ள 33 வார்டுகளில் மொத்தம் 71 வாக்குச்சாவடி மையங்கள் என நகராட்சி பகுதிகளில் மட்டும் 143 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 23 பேரூராட்சி பகுதிகளில் (34 மண்டலம்) மொத்தம் 363 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி பகுதியில் மட்டும் 421 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மாவட்டம் முழுவதும் 486 வார்டுகளில் மொத்தம் 747 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 3,000 வாக்குப்பதிவு கருவிகள்(Ballot Unit), 1,500 கட்டுப்பாட்டு கருவிகள்(Control Unit) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.