Close

Emp TNPSC group 2

Publish Date : 07/02/2024

செ.வெ.எண்:-15/2024

நாள்:-05.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-II தேர்வுக்கான மாதிரி நேர்காணல் 07.02.2024 அன்று நடத்தப்படவுள்ளது -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-II எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-II (TNPSC-Group–II) முதனிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்துத் தேர்வர்களும் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக மாதிரி நேர்காணல் (Mock Interview) 07.02.2024 அன்று நடத்தப்படவுள்ளது.

எனவே அதிக அளவிலான தேர்வர்கள் இந்த மாதிரி நேர்காணலில் கலந்துகொண்டு பயன்பெறலாம். அவ்வாறு கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவுசெய்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.