Close

Emp TNPSC group 4

Publish Date : 07/02/2024

செ.வெ.எண்:-16/2024

நாள்:-06.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 போட்டித் தேர்வுக்கு தயாராகும் வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணி காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் திட்ட நிரலின்படி– தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4(TNPSC Group-IV)-க்கான அறிவிப்பு 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளதால், போட்டித் தேர்வுகளுக்கான(TNPSC Group-IV/VAO) ஒருங்கிணைந்த நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 02.02.2024 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.