Close

Employment – Coaching – Ottanchatram

Publish Date : 01/11/2022

செ.வெ.எண்:-81/2022

நாள்:31.10.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஒட்டன்சத்திரம், கிறித்துவ பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” மூலமாக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகளில் விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாரந்தோறும் இலவச மாதிரி தேர்வுகளும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக, ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைத் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ஒட்டன்சத்திரம், கிறித்துவ பாலிடெக்னிக் கல்லூரியில் ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்” மூலமாக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 14.10.2022 முதல் தினந்தோறும் அரசு விடுமுறை நாட்களை தவிர தொடர்ச்சியாக காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் போட்டித் தேர்வர்கள் பயிற்சி வகுப்பிற்கு நேரில் வருகை புரிந்து, தங்களது பெயரினைப் பதிவு செய்து, வகுப்புகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 0451 2904065 என்ற தொலைபேசி எண் மற்றும் 9499055924 என்ற கைப்பேசி எண் ஆகியவை வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.