Close

Employment-Free coaching-Tnpsc

Publish Date : 29/04/2022

செ.வெ.எண்:-82/2022

நாள்:28.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-IV (TNPSC Group-IV) காலிப்பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் 11.04.2022 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, இக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக அல்லது அலைபேசி எண்.6380247400 (Whatsapp) மூலமாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவுசெய்து இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.