Close

Employment – MEGA JOB FAIR

Publish Date : 06/06/2022
.

செ.வெ.எண்:-14/2022

நாள்:04.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவப் பொறியியல் கல்லூரியில் இன்று(04.06.2022) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது – முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,714 வேலைநாடுநர்களுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் பணி நியமன உத்தரவாத கடிதங்களை வழங்கினர்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவப் பொறியியல் கல்லூரியில் இன்று(04.06.2022) நடைபெற்றது.

முகாமில் தேர்வு செய்யப்பட்ட வேலைநாடுநர்களுக்கான பணி நியமன உத்தரவாத கடிதங்களை, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் வழங்கினர். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஐந்தாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு, பொறியியல், டிப்ளமோ, பி.எட்., ஐ.டி.ஐ., கணினி தகுதி, ஓட்டுநர் தகுதி உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை உடைய 13,462 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். மேலும் 320-க்கும் அதிகமான வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு வேண்டிய பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் மொத்தம் 2,714 வேலைநாடுநர்களை தனியார் துறை நிறுவனத்தினர் தேர்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிற்கிணங்க, தமிழகம் முழுவதும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படுகிறது.

இந்த முகாமில் 13,000-க்கும் அதிகமான வேலைநாடுநர்கள் கலந்துகொண்டுள்ளனர். பெரும்பாலும் உயர்கல்வி தகுதியுடையவர்களே அதிகளவில் பங்கேற்றுள்ளனர். இதுபோன்று வீடு தேடி வேலைவாய்ப்பு வழங்கும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

அரசுத்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். போட்டித் தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் வகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3வது முறையாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. திண்டுக்கல்லில் ஒரு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே நடைபெற்ற முகாமில் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போது ஒட்டன்சத்திரத்தில் 2-வது முறையாக இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 320-க்கும் அதிகமான பெரிய நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு வேண்டிய பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்.

படித்த வேலைநாடுநர்களுக்கு வானத்தைத் தொடும் அளவிற்கு எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன், திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேலை கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது உழைப்பால் உயர்ந்து, நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் முறைகளை ஆராய்ந்து, தொழில் முதலீட்டாளர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து. அதற்கான வழிவகை ஏற்படுத்தி வருகிறார். இதன்மூலம், தமிழகத்தில் படித்த இருபாலருக்கும் நேர்முறையாகவும், மறைமுகமாகவும் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். படித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தருவது இந்த அரசின் பொறுப்பு, கடமை. அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் நேரத்தில் பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, தற்போது ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தில் படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது.

அதற்காக தமிழகம் முழுவதும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 58 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் 80,000-க்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெறுவது 59-வது முகாம். இந்த முகாமில் 320-க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்கின்றனர். வரும் ஆக.15-ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ‘வேலை இல்லை’ என்ற சொல், இல்லாத வகையில் வேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் ஏற்கனவே 91 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. தற்போது 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஒட்டன்சத்திரத்தில் தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு.கொ.வீரராகவராவ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். தமிழகத்தில் இதுவரை 59 இடங்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 4.47 இலட்சம் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பங்கேற்றுள்ளனர். அதில் 80,916 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி, அரசுப்பணிக்காக நடைபெறும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கல்வி தொலைக்காட்சி மூலம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் தன்னார்வ பயிலும் வட்டம்(ளுவரனல ஊசைஉடந) மூலம் 25,000-க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று வருகின்றனர். கடின உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை இருந்தால் கனவுகள் நிறைவேறும், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் திரு.கே.ஜெகதீசன், தமிழ்நாடு மாநில் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், வேலைவாய்ப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் திரு.ர.தேவேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குநர் திருமதி ச.பிரபாவதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.தார்சிஸ், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி சத்தியபுவனா, திருமதி அய்யம்மாள், முக்கிய பிரமுகர்கள் திரு.ஜோதீஸ்வரன். திரு.தங்கராஜ், திரு.சுப்பிரமணி, திரு.தர்மராஜ், திரு.கருப்பசாமி, திரு.அன்பு, திரு.காதர்பாட்ஷா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.