Employment office Private job fair on 14.06.2019

Publish Date : 11/06/2019

செ.வெ.எண்:-16/2019 நாள்:11.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

வேலைவாய்ப்புத் துறையால் தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜுன் மாதம் 14.06.2019 அன்று காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன்; கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளி நகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை வேலையளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின்; விபரத்தினையும் திண்டுக்கல்; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தொலைபேசியின் வாயிலாக (தொலைபேசி எண்.0451-2461498) தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இம்முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரிசெய்து தரப்படும். எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.