TNPSC Group I Free Training
செ.வெ.எண்:- 08/2020 நாள்:-07.01.2020
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC Group-Iக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவக்கப்பட உள்ளன மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரிய தேர்வுகள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான பொது அறிவு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், மாத இதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள TNPSC Group-I-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் துவக்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்பில் முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும், மேலும், பல மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் மனுதாரர்கள் உடன் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தை நேரில் அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்