Close

Employment – Private Job – Notification

Publish Date : 05/02/2024

செ.வெ.எண்:-74/2024

நாள்:-31.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 02.02.2024 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலைவாய்ப்புத் துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், 02.02.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30-மணிக்கு நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பல முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற்பழகுநர் பயிற்சிக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.v

இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண் 0451-2904065 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.