Close

Employment -TNUSRB – Notification

Publish Date : 01/02/2024

செ.வெ.எண்:-68/2024

நாள்:-30.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்வாகி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு உடற்தகுதித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 30.01.2024 அன்று முதல் நடத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களும் பயன்பெறும் வகையில் உடற்தகுதித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் 30.01.2024 அன்று முதல் நடத்தப்படுகிறது.

எனவே, இரண்டாம் நிலைக் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்வாகி உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.