Engineering admission

Publish Date : 02/05/2019

செ.வெ.எண்:- 01/2019 நாள்:- 02.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள், மாணவியர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்தல், சான்று சரிபார்ப்பு மற்றும் மாணவர்கள், மாணவியர்கள் சேர்க்கை ஆகியவற்றிற்கு அரசால் திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள ஜி.டி.என். கலைக்கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்.

2019-ம் ஆண்டில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள், மாணவிகள் சேர்க்கை பணிகள் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் மூலம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள், மாணவியர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்தல், சான்று சரிபார்ப்பு மற்றும் மாணவர்கள், மாணவியர்கள் சேர்க்கை ஆகியவற்றிற்கு அரசால் திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள ஜி.டி.என். கலைக்கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள், மாணவியர்கள் சேர்க்கைக்கு இணைய வழி மூலம் மே 2 முதல் மே 31 வரை விண்ணப்பங்கள் மேற்கொள்ளலாம். இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முன்னர் மாணவர்கள், மாணவியர்கள் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், வகுப்பு/ஜாதி தகவல்கள், சிறப்பு இட ஒதுக்கீடு தகவல்கள், இணைய தளம் மூலம் பதிவு கட்டணம் செலுத்துவதற்கான விபரம், பெற்றோரின் ஆண்டு வருமானம், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி பற்றிய தகவல்கள், 12-ம் வகுப்பு தேர்வு பதிவு எண், 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள், மாணவியர்கள் தங்களது விண்ணப்பங்களை அரசு இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள பதிவேற்று மையங்கள் மூலம் அதிக கட்டணமின்றி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது. பதிவு கட்டணம் வரைவு காசோலையாக இருப்பின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் சேர்க்கை வசதி மையங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், கல்வி உதவித் தொகை, முதல் பட்டதாரி கட்டண சலுகை, உயர்கல்வி உதவித்தொகை, கல்வி கட்டண விலக்கு ஆகியவை தேவைப்படும் நேர்வுகளில் இதற்குரிய தரவுகளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜி.டி.என்.கலைக்கல்லூரியில் மாணவர்கள், மாணவியர்கள் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திட தேவையான அனைத்து உதவிகளும் ஜி.டி.என்.கலைக்கல்லூரி மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும், மாணவியர்களும் பயன்பெறலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.