Close

Epic ID card Camp_2021

Publish Date : 10/03/2021

செ.வெ.எண்:- 15/2021

நாள்:-10.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2021-இன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (DESIGNATED POLLING STATION LOCATIONS) இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்திரவின்படி, எதிர்வரும் 13.03.2021(சனிக்கிழமை) மற்றும் 14.03.2021(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (DESIGNATED POLLING STATION LOCATIONS) சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் – 2021-இன் போது வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் இம்முகாமினைப் பயன்படுத்தி தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்லிடப்பேசி/ கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.