Close

EVM Randomization to polling stations

Publish Date : 30/03/2021
.

செ.வெ.எண்:-44/2021

நாள்:- 30.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொது பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி தேர்தல் பொது பார்வையாளர்கள் திரு.புபிந்தர் சிங், இ.ஆ.ப., (127-பழனி சட்டமன்ற தொகுதி), திருமதி சோமா பட்டாச்சார்ஜி, இ.ஆ.ப.,(129-ஆத்தூர் மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள்), திரு.எம்.ஹரேகிருஷ்ணா, இ.ஆ.ப.,(133-வேடசந்தூர் மற்றும் 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகள்), திரு.பாபுசிங் ஜமோட், இ.ஆ.ப.,(நத்தம் மற்றும் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகள்), மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021, வருகின்ற 06.04.2021 அன்று நடைபெற உள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் கலக்கல் முறை பகிர்ந்தளித்தல் பணிகள் தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்குச்சாவடி எண்ணிக்கைக்கு தக்கவாறு, இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடி எண் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பொது பார்வையாளர்கள், சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 132 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,516 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,211 கட்டுப்பாட்டு கருவிகள், 3611 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பழனி சட்டமன்ற தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 405 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 972 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 486 கட்டுப்பாட்டு கருவி, 547 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 352 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 423 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 423 கட்டுப்பாட்டு கருவி, 476 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 407 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 978 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 489 கட்டுப்பாட்டு கருவி, 550 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 342 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 822 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 411 கட்டுப்பாட்டு கருவி, 462 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நத்தம் சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 402 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 483 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 483 கட்டுப்பாட்டு கருவி, 543 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 397 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 954 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 477 கட்டுப்பாட்டு கருவி, 536 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 368 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 884 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 442 கட்டுப்பாட்டு கருவி, 497 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து, இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்படும். பின்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நாளுக்கு முன்னர் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.