Close

EVM Randomization

Publish Date : 26/03/2019
1

1

செ.வெ.எண்:-27/2019 நாள்:- 26.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் பகிர்ந்தளித்தல் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திண்டுக்கல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2019, வருகின்ற 18.04.2019 அன்று நடைபெற உள்ளதால், இப்பொது தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் பகிர்ந்தளித்தல் பணிகள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் (Election – General Observer) திரு.சுதேஷ்குமார் மோக்தா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

முதற்கட்டமாக நடைபெற்ற இப்பணிகள் அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இப்பணி, நிறைவுற்றதால்; அந்தந்த தொகுதிக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் இயந்திரங்களை சரிபார்த்து உரிய பாதுகாப்புடன் தலைமையிடத்திலிருந்து எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலக்கல் முறை பகிர்ந்தளித்தல் பணிகள் நடைபெற்ற பின் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பான அனைத்து பணிகளும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, பழனி சார்ஆட்சியர் திரு.அருண்ராஜ்.இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ராஜ்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்; ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.