Close

Ex Service man Dept

Publish Date : 30/03/2021

செ.வெ.எண்:-42/2021

நாள்:-30.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2022 ஜனவரி பருவத்தில் சேர்வதற்கான விவரம் அறிய www.rimc.gov.in -ல் பார்க்கவும்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2021 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டை பிரதிகளில்) தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை-03 என்ற முகவரிக்கு சேர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், 01.01.2022 அன்று 11½ வயது நிரம்பியராகவும், 13 வயதை அடையாதயவராகவும், ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் அல்லது ஏழாம் வகுப்பு பயில்பவர் ஆகிய தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்விற்கு அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.