Close

Ex-Serviceman – Airports Authority of India – Vacancy Notification

Publish Date : 22/09/2022

செ.வெ.எண்:-63/2022

நாள்:21.09.2022

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Air ports Authority of India) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் www.aai.aero என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.09.2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அதன் விபரத்தினை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஅலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை அணுகி தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.