Ex-servicemen Employment
Publish Date : 26/06/2019
செ.வெ.எண்:-56/2019 நாள்:-26.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
UPSC மூலம் ஒருங்கிணைந்த முப்படையில் அலுவலர் நிலையில் பணியில் சேர CDS II 2019 தேர்விற்கு முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் http:/exweletutor.com என்ற இணையதள முகவரியை அணுகி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு கடைசி நாள் 08.07.2019 ஆகும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் தெரிவிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் உரிய விபரங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விபரம் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.