Close

Ex-Servicemen – GDP – 30.09.2022 – Notification

Publish Date : 22/09/2022

செ.வெ.எண்:-62/2022

நாள்:21.09.2022

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30.09.2022 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30.09.2022 அன்று பிற்பகல் 4.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப்பிரதிகளில் 30.09.2022 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் 4.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தரைத்தளத்தில் GDP ஆன்லைனில் பதிவு செய்து, வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.