Close

Ex-servicemen Scholarship

Publish Date : 26/06/2019

செ.வெ.எண்:-55/2019 நாள்:-26.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் அறிவது, 2019-20-ம் கல்வியாண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை www.esmwel.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படித்து கொண்டிருக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு நாளது தேதிவரை விண்ணப்பிக்காத முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் உடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி விபரம் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.