Ex-Servicemen Welfare PMSS

Publish Date : 09/08/2019

செ.வெ.எண்:27/2019 நாள்:09.08.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கைச் செய்தி

பாரதபிரதமர் கல்விஉதவித்தொகைதிட்டத்தின் கீழ் 2019-20 கல்வியாண்டில் தொழிற்கல்விமற்றும் தொழில்சார்ந்த கல்விபட்டப்படிப்புபயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்குபிரதிமாதம் ரூ.3,000/- (ரூ.36,000/ஆண்டுக்கு) மற்றும் ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500/-(ரூ.30,000/ஆண்டுக்கு) என்றவிதத்தில் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கல்விஉதவித்தொகைபெறுவதற்கானவிண்ணப்பங்களைமுன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்திட ஏதுவாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் www.ksb.gov.in என்ற முகவரியில் 15.11.2019-க்குள் விண்ணப்பித்து,அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படியும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,திண்டுக்கல் மாவட்டத்தைசார்ந்தமுன்னாள் படைவீரர்கள் பாரதபிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துபயன்பெறலாம் எனமாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்திவெளியீடு:- செய்திமக்கள் தொடர்புஅலுவலர்,திண்டுக்கல்.