Close

Exewel building rent

Publish Date : 15/02/2022

செ.வெ.எண்:-32/2022

நாள்:15.02.2022

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தின் மேல்பகுதி முழுவதையும் (கட்டிட உள்பரப்பு 48.37ச.மீ.) அரசு அலுவலகங்களுக்கு உள்வாடகைக்கு விடுவதற்கு, மாதவாடகையாக ரூ.16,630/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு அலுவலர்கள் தங்களது அலுவலக உபயோகத்திற்கு தேவைப்படின், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0451-2460086-ல் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.