Close

Explosives Online Application

Publish Date : 30/07/2019

செ.வெ.எண்:82/2019 நாள்:30.07.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

கடந்த 27.06.2018 அன்று சட்டசபையில் நடைபெற்ற வருவாய்த் துறையின் மானியக் கோரிக்கையில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு செய்தவாறு நடப்பு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் இணையம் (Online) வழி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

பட்டாசு சில்லறை இருப்பு மற்றும் விற்பனை செய்யும் பொருட்டு தற்காலிக உரிமம் கோரும் வணிகர்கள் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே உரிமம் வழங்க ஏதுவாக வெடிபொருள் சட்ட விதிகள் 2008ன்படி தங்களது விண்ணப்பங்களுடன்

• உரிமம் கோரும் புலம் குறித்தான வரைபடம் (6 நகல்கள்)

• புலம் தொடர்பான ஆவணங்கள் (5 நகல்கள்)

• 0070 Other Administrative Services 60 Other Services 103AA Explosive receipt 0004 Explosive Act (0070 60 103AA 0004) என்ற தலைப்பில் ரூ.500/- கட்டணம் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு

• மனுதாரரது இருப்பிடம் குறித்த சான்று (பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அடையாள அட்டை ஃ ஸ்மார்ட் கார்டு)

• ஊராட்சியிலிருந்து பெறப்பட்ட வரி தொடர்பான ரசீதுகள்

• மனுதாரரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2

ஆகிய ஆவணங்களுடன் அரசு இ சேவை மையங்களில் 31.08.2019ம் நாளிற்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 31.08.2019ம் நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.