Close

Exwel-CDS II 2022

Publish Date : 03/06/2022

செ.வெ.எண்:-04/2022

நாள்:02.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒருங்கிணைந்த முப்படையில் அலுவலர் நிலையில் பணியில் சேர CDS II2022 தேர்விற்கு முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

UPSC மூலம் ஒருங்கிணைந்த முப்படையில் அலுவலர் நிலையில் பணியில் சேர CDS II2022 தேர்விற்கு முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசிநாள் 07.06.2022 ஆகும்.

முப்படையில் அலுவலர் நிலையில் பணியில் சேர CDS II2022 தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், இதுதொடர்பாக சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெயினிங் அகாடமியில் நடைபெறவிருக்கும் பயிற்சியில் சேர விருப்பம் தெரிவிக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் உரிய விபரங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.