Close

Exwel employment renewal

Publish Date : 23/12/2021

செ.வெ.எண்:-59/2021

நாள்:23.12.2021

முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் வேலைவாய்ப்பிற்கென பதிவு செய்து 2017, 2018 மற்றும் 2019 ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் வேலைவாய்ப்பிற்கென பதிவு செய்து 2017, 2018 மற்றும் 2019 ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அவர்களது பதிவினை அரசாணை வெளியிட்ட நாளிலிருந்து 3 மாதத்திற்குள் (04.03.2022-க்குள்) புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசாணை பெறப்பட்டுள்ளது. இச்சலுகையினை தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.