Close

Exwel-Incentive amount to Sainik School

Publish Date : 24/11/2022

செ.வெ.எண்:-47/2022

நாள்:22.11.2022

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் சைனிக் பள்ளியில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சைனிக் பள்ளியில், படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்காக 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் அதிகளவில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் சேருவதை ஊக்குவிக்கவும், இதனால் முன்னாள் படைவீரர்களுக்கு ஏற்படும் கல்வி நிதி சுமையினை குறைத்திடும் பொருட்டும் அவர்களின் சிறார்கள் சைனிக் பள்ளி (Sainik School) -ல் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000-னை கல்வியாண்டு 2022-23 முதல் முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் கைம்பெண்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் கைம்பெண்கள் தங்களின் சிறார்களை அதிக அளவில் சைனிக் பள்ளியில் சேர்த்து ஊக்கத்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.