Close

Exwel Kodaikanal

Publish Date : 28/05/2025

செ.வெ.எண்:-84/2025

நாள்:-27.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் தங்குவதற்கு முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் முன்பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லமானது 23.05.2025 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, கொடைக்கானல் ஓய்வு இல்லத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் exweldgl@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பம் மற்றும் விபரங்களை அனுப்பி பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்.0451-2460086 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.