Exwel-KSB scholarship extended
செ.வெ.எண்:-55/2021
நாள்:21.12.2021
மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி (RMDF) கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மத்திய அரசின் ரக்ஷா மந்திரி விருப்புரிமை நிதி (RMDF) 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பாக, இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இளங்கலை பட்டம் பயிலும் மாணவர்கள் 07.01.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஹவில்தார் (Havildar) வரை தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களின் சிறார்கள் 2020-2021-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் இளங்கலை பயிலும் சிறார்களும் பயன்பெறும் வகையில் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பதிவு செய்த விபரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.