Close

Exwel – Nimmathi illam

Publish Date : 16/12/2021

செ.வெ.எண்:46/2021

நாள்:16.12.2021

சென்னை மைலாப்பூரில் செயல்பட்டு வரும் நிம்மதி இல்லத்தில் விருப்பமுள்ள ஆதரவற்ற முன்னாள் படைவீரர்/விதவைகள் சேர்ந்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் நலனுக்காக, ஆதரவற்ற முன்னாள் படைவீரர்/விதவைகள் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை மைலாப்பூரில் நிம்மதி இல்லம் செயல்பட்டு வருகிறது.

நிம்மதி இல்லத்தில் சுமார் 50 பேர் தங்கும் அளவிலான இரண்டு விடுதி அறைகள்(னுழசஅவைழசல), உடற்பயிற்சி சிகிச்சை மையம், சமையலறை மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவை தரைத்தளத்திலும், பொழுதுபோக்கு அறை, கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

இந்த இல்லத்தில் சேர விருப்பம் உள்ள ஆதரவற்ற முன்னாள் படைவீரர்/விதவைகள் எண்.228, ஜார்ஜ் கெத்தாடிரல் டிரஸ்ட், பீட்டர்ஸ் ரோடு, பீட்டர்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை – 600 014, என்ற முகவரியை அணுகி பயன்பெறலாம். இந்த அரிய வாய்ப்பை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 044-28522107, 044-28114261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.