Close

Exwel Special GDP

Publish Date : 25/03/2022
.

செ.வெ.எண்:-48/2022

நாள்:25.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் பணியாற்றி வரும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள்ஃசார்ந்தோர்கள் மற்றும் பணியாற்றி வரும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.03.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள்ஃசார்ந்தோர்கள் மற்றும் பணியாற்றி வரும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள், இலவச பட்டா, கடனுதவி, மகள் ஓய்வூதியம், உயர்கல்வி இடஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கைகளை தெரிவித்து மனுவாகவும் அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடன் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் பணியாற்றி வரும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் நாட்டிற்காக உழைத்த முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் மற்றும் பணியாற்றி வரும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர்(பொ) திருமதி சுகுணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், முன்னோடி வங்கி மேலாளர் திரு.மாரிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.