Close

Exwel-Temple job – Notification

Publish Date : 01/02/2024

செ.வெ.எண்:-69/2024

நாள்:-30.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

கோவில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு (Temple Protection Force) தகுதியான முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கு பாதுகாப்பு பணிக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவில் பாதுகாப்புபணிக்கு உடல் திடகாத்திரம், தகுதியுள்ள விருப்பம் தெரிவிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தங்கள் அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.