FAMILY PENSION (Ex-Service man Dept)
செ.வெ.எண்:-48/2021
நாள்:-24.09.2021
முப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் துணைவியரின் பெயர் ஓய்வூதிய கொடுப்பானையில் விடுப்பட்டு இருப்பின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தகவல்.
முப்படையில் பணிபுரிந்து 01.03.1985-க்கு முன் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் தங்களது துணைவியரின் பெயர் ஓய்வூதிய கொடுப்பானையில் விடுப்பட்டு இருப்பின் அவர்தம் பெயரினை (Endorsement of family pension) பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகீறீர்கள்.
மேலும் முன்னாள் படைவீரர்களின் துணைவியரின் பெயர் ஓய்வூதிய ஆணையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தினை முன்னாள் படைவீரர் ஓய்வூதியம் பெறும் வங்கிக்கு சென்று உறுதி செய்து பெயர் விடுப்பட்டு இருந்தால் பெயரினை ஓய்வூதிய கொடுப்பானையில் சேர்ப்பதற்கு ஏதுவாக 30.09.2021-க்குள் இதற்குரிய விண்ணப்ப படிவங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்று பதிவுகளை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.