Close

Fisher- IAMP Training

Publish Date : 01/08/2024

செ.வெ.எண்:-84/2024

நாள்:-30.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்குநரகம் மூலம் மீன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்குநரகம் மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வரும் 07.08.2024, 08.08.2024 மற்றும் 09.08.2024 ஆகிய தேதிகளில் விரால் மீன் வளர்ப்பு, பண்ணைக்குட்டைகளில் கூட்டின மீன் வளர்ப்பு, மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவு தயாரித்தல் குறித்த பயிற்சி, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, பாலித்தீன் உறையிட்டு மீன் வளர்த்தல், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பயனாளிகள், திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநரை, “மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, டிஎம்எஸ்எஸ்எஸ் எதிரில், நேருஜி நகர், திண்டுக்கல்“ அலுவலகத்தை நேரிலோ அல்லது அலைபேசி எண் 9751664565 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.