Fisheries Housing – Notification
செ.வெ.எண்:-20/2023
நாள்:-07.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் பயன்பெற உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்ககள் சார்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 2016-17-ம் ஆண்டு மீனவர்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 வீடுகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.2.40 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்குரிய தகுதியான மீனவ பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்ககள் சார்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ மகளிர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விண்ணப்பம் பெற, “பி4/63 நேருஜி நகர், 80 அடி ரோடு, திண்டுக்கல்-624 001“ என்ற முகவரியில் செயல்படும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண் (0451 – 2900148) வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.