Close

Fisheries NADP 2021-22 Scheme

Publish Date : 30/11/2021

செ.வெ.எண்:-81/2021

நாள்:30.11.2021

தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (2021-22)-ன் கீழ் மீன்வளர்ப்பினை ஊக்கப்படுத்திட மானியம் வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக 1000 ச.மீ பரப்பளவு கொண்ட பல்நோக்கு பண்ணைக்குட்டைகளை புணரமைத்தல் மற்றும் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங் கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பு ஊக்குவித்தல் திட்டத்திற்கு 40ம% மானியமாக ரூ.25000/-ம், பண்ணைக் குட்டைகள் புணரமைத்தல் மற்றும் விரால்மீன் வளர்த்தெடுத்தல் திட்டத்திற்கு 40ம% மானியமாக ரூ.30000/-ம் மற்றும் பண்ணைக் குட்டைகளில் நீர் சேமிப்புத்திறனை மேம்படுத்திட பாலித்தீன் உறைகளிட்டு மீன்வளர்த்தெடுத்தல் மற்றும் பண்ணைக்குட்டைகளை புணரமைத்தல் திட்டத்திற்கு 40ம% மானியமாக ரூ.75000/-ம் வழங்கப்படவுள்ளது.

எனவே, மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள ஏற்கனவே 1000 ச.மீ பரப்பளவில் மீன்பண்ணை அமைத்துள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் திண்டுக்கல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், B4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தையும், 0451–2900148 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.