Close

Fisheries – Notification

Publish Date : 17/06/2025

செ.வெ.எண்:-56/2025

நாள்:-16.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு(இரு உறைமுறை)

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துறைக்குளங்களான மாவூர்அணை, சிறுவன் குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம் மற்றும் தருமத்துப்பட்டி புதுக்குளம் ஆகிய 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் காணலாம்.

தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு திண்டுக்கல் மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை(அலுவலக முகவரி: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் 624001) தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 0451-2900148, மின்னஞ்சல்: adfdglin11@gmail.com மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.