Fisheries – PMMSY scheme
செ.வெ.எண்:-23/2021
நாள்:08.12.2021
பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (2021-22)-ன் கீழ் மீன்வளர்ப்பு திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக 2021-22-ஆம் ஆண்டில் (PMMSY) பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.7,50,000 திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள நீரினை மறுசுழற்சி முறையில் சிறிய அளவிலான தொட்டிகள் அமைத்து நன்னீர் வளர்ப்பு செய்தல் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு(GC) 40 சதவீதம் மானியமாக ரூ.3,00,000 மற்றும் ஆதிதிராவிடர்(SC) பிரிவினருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4,50,000 வழங்கப்படவுள்ளது. ரூ.7,00,000 திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள 100 ஹெக்டேர் பரப்பளவில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்கும் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு(GC) 40 சதவீதம் மானியமாக ரூ.2,80,000 மற்றும் ஆதிதிராவிடர்(SC) பிரிவினருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.4,20,000 வழங்கப்படவுள்ளது.
எனவே, மேற்காணும் மீன்வளர்ப்பு திட்டங்களில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள்;; திண்டுக்கல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள் பெறப்படின், மூப்புநிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் “மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், B4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் – 624001” என்ற முகவரியில் செயல்படும் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 0451–2900148 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.