Flood Warning – Notification
செ.வெ.எண்:-10/2022
நாள்:03.08.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், உபரி நீர் திறந்துவிடப்படவுள்ளதால், பாலாறு, பொருந்தலாறு, சண்முகநதி மற்றும் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 03.08.2022 அன்று 6.00 மு.ப மணியளவில் 60.07 அடியாகவும் (மொத்த உயரம் 65 அடி) அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 495 க.அடியாகவும் உள்ளது.
மேலும், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், விரைவில் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து உபரி நீர் சண்முகநதி ஆற்றில் திறந்து விடப்படவுள்ளது. மேலும், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள வைகை அணையில் 03.08.2022 அன்று மொத்த கொள்ளளவான 71 அடியில் 70 அடி கொள்ளளவை எட்டவுள்ளதால் வைகை அணையிலிருந்து உபரிநீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்படவுள்ளது.
எனவே, பாலாறு, பொருந்தலாறு, சண்முகநதி மற்றும் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுவதோடு, பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.