Close

Food safety and Quality

Publish Date : 02/12/2021

செ.வெ.எண்:-07/2021

நாள்:02.12.2021

வெல்லம் மற்றும் உணவு பொருட்கள் தரம் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், அச்சு வெல்லம், மண்டை வெல்லம், பனங்கருப்பட்டி மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை உள் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டும், வெளி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக வாங்கும் வெல்லத்தினை தரமானதா என்பதனை பார்த்து, பொதுமக்கள் கவனத்துடன் கடைகளில் வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வெல்லத்தில் மைதா. வெள்ளை சர்க்கரை, சூப்பர்பாஸ்பேட், சோடியம் பைகார்ப்பனேட், கால்சியம் கார்ப்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட் மற்றும் இதர செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வருகிறது. உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 ஒழுங்கு முறைகள் 2.8.4.1 மற்றும் 2.8.4.2-ல் வெல்லம் தயாரிப்பதற்கு தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கலப்படமில்லாத வெல்லமானது அடர்ந்த அரக்கு நிறமாகத்தான்(Dark Brown Color) இருக்கும், அடர் அஞ்சள், வெளிர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லத்தில் செயற்கை வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே அதை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் உணவிற்காக வெல்லம் வாங்கும்போது, அடர்ந்த அரக்கு நிறமுள்ள வெல்லத்தையே வாங்கி பயன்படுத்த வேண்டும். உணவு வணிகர்கள் தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற வெல்லத்தை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது.

மேலும், வெல்லம் மற்றும் உணவு பொருட்கள் தரம் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணை பயன்படுத்தலாம். மேலும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலரை 9443381989 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.