Food Safety – Deepavali
செ.வெ.எண்:-10/2023
நாள்:-03.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் உணவு பண்டங்கள் மற்றும் தின் பண்டங்கள் தயாரிக்க வேண்டும். இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்கக் கூடாது.
இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் பணியாளர்கள் முழு உடல் நலத்துடனும், தொற்று நோய்கள் இல்லா வண்ணமும் இருப்பவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும்பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியிடு அகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீதுகளில் உணவு அங்காடியின் உரிம எண், பதிவு எண்ணை அடிச்சத்து ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். குறிப்பாக பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களும் http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் (இனிப்பு மற்றும் கார வகைகள்) தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
உணவு பொருட்கள் தொடர்பாக புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.