Close

Food Safety Meeting

Publish Date : 29/03/2022
.

செ.வெ.எண்:-56/2022

நாள்:28.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்களில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.03.2022) தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ், பயோ டீசல் தயாரிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுசுழற்சிக்கு பெறப்பட்ட விபரம், தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றியது மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது, உணவு பாதுகாப்பு அலுவலர்களால் சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுத்த விபரம், மால், சூப்பர் மாத்க்கெட் மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காலாவதியான மற்றும் கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கண்டறிய சிறப்பு முகாம் மூலம் ஆய்வு மேற்கொண்டது போன்ற உணவு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
உணவகங்களில் உணவு பார்சல் வழங்கும்போது, சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்து வழங்க வேண்டும். முடிந்தவரை இலையில் பேக்கிங் செய்து வழங்க வேண்டும். நல்ல சுகாதாரமான எண்ணைய்களை பயன்படுத்த வேண்டும். அசைவ உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் ஆட்டிறைச்சி மிகவும் தரமானதாக உள்ளதா என்பதை தொடர்ந்து பரிசீலித்துக்கொள்ள வேண்டும். ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் விற்பனை செய்யப்டுவதை தொடர்ந்து கண்காணித்து, தடை செய்திட வேண்டும். மாம்பழம் சீசன் துவங்கவுள்ளதால், கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்க வாய்ப்பு உள்ளது. அவைகளை தற்போது இருந்தே கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் உணவருந்துவதற்கு உகந்த இடம் சான்று கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும், தூய்மையான தெரு அங்காடி சான்று கொடைக்கானல் சாலையோர கடை உரிமையாளர்களுக்கும், கோயில்களில் நடைபெறும் அன்னதான திட்டத்தில் சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்கியதற்கான சான்று கோயில் அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.சிவராமபாண்டியன், துணை இயக்குநர்கள்(சுகாதாரப் பணிகள்) பழனி மரு.யசோதா, திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மண்டவெல்லம் தயாரிப்பு உரிமையாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.