Close

Forest – Competition

Publish Date : 31/01/2022

செ.வெ.எண்:48/2022

நாள்: 29.01.2022

உலக ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு, ஈர நிலங்களை பாதுகாப்பது தொடர்பான புகைப்படப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

உலக ஈர நிலங்கள் தினத்தை (பிப்ரவரி-02) முன்னிட்டு ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் ஈர நிலங்கள் தினம் கொண்டாட தமிழ்நாடு ஈரநில ஆணையம், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈர நிலங்களை பாதுகாப்பது தொடர்பான புகைப்படப் போட்டி நடத்தப்பட உள்ளது.

ஈர நிலங்கள் தொடர்பாக ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து ஈர நிலங்களின் முக்கியத்துவம் குறித்த புகைப்படங்கள் வரவேற்கப்படுகிறது. புகைப்படங்களை dfodglwetland@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 01.02.2022 காலை 10.00 மணிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியின் தலைப்பு: Wetlands Action for People and Nature(பொதுமக்கள் மற்றும் இயற்கைக்கான ஈரநிலம் மேம்பாட்டு நடவடிக்கை)

போட்டிகள் பிரிவு – 1: 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, பிரிவு – 2: 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, பிரிவு – 3: கல்லூரி மாணவ, மாணவிகள் என்ற வகையில் 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் தங்கள் புகைப்படங்களை மின்னஞ்சலில் அனுப்பும்போது, தங்கள் பெயர், தொலைப்பேசி எண் போன்ற விபரங்களை மின்னஞ்சலில் பதிவிட வேண்டும். சிறந்த புகைப்படங்களுக்கு, 02.02.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் உலக ஈரநில தினம் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

போட்டி தொடர்பான மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வன அலுவலக தொலைப்பேசி எண்ணில் (0451-2460470) தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.